top of page
ஆண்டாள் - ஆடிப்பூரம் ஆண்டாள் வாழிதிருநாமம் சாதிப்பது  குமாரி. ஜனனி கிரிதரன்.png

​ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமதே ராமானுஜாய நம: || ஸ்ரீமத் வரவரமுநயே நம:

"ஸ்ரீஶடகோபவாங்மயம்"

 

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய பத்திரிக்கை வெளியீடு வைபவம்.

திருவாடிப்பூரம் - சோபக்ருத் - ஆடி - 6 (22-07-2023)

சேவடிசெவ்விதிருக்காப்பு என்கிற ஒலிஅலை (YouTube Channel) கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாய விஷயங்களை காணொளி வடிவில் தங்களது ஒலிஅலையில் வழங்கி வருகிறது. இந்த ஒலிஅலை தொடங்கப் பெற்றதற்கான முக்கிய நோக்கம் சிதிலம் அடைந்த திருக்கோயில்கள், ஒரு வேளை திருவாராதனத்திற்குக் கூட வசதியில்லாமல் இருக்கும் திருக்கோயில்கள், விளக்கு திரி மற்றும் எண்ணெய் போன்ற  அவசியமான பொருட்களை சமர்பித்தலாகும். “திருக்கோயில் ஸம்ரக்ஷணமே” இந்த ஸ்ரீஶடகோபவாங்மயம் என்கிற  இணையவழி மாதாந்திர இதழின் நோக்கமும் ஆகும்.

 

       கடல் அகத்திய முனிவரின் வாயில் நுழைந்து புறப்பட்டதாகையாலே அகஸ்தியவாங்மயமாய் இருக்கும். திருவாய்மொழியாகிற கடல் குருகூர்ச் சடகோபன் சொல்மாலையாய் இருக்கும். எம்பெருமான் உகந்து எழுந்தருளியிருக்கும் இடங்களை தெரிவிக்கின்ற ஸ்ரீபராசரபட்டர்

        “வடதள தேவகீ ஜடர சடகோபவாக்வபுஷி”

 

என்று தெரிவிக்கிறார். எம்பெருமான் திருவுள்ளமுகந்து எங்கு எங்கு எழுந்தருளியுள்ளான் என்றால் வடதள - ஆலிலையிலே எழுந்தருளியிருந்தானாம். தேவகீ ஜடர - தேவகிப் பிராட்டியின் கர்பத்திலே எழுந்தருளியிருந்தானாம். அதன் பிறகு ஶடகோபவாக் - நம்மாழ்வாருடைய திருவாக்கிலே, நம்மாழ்வாருடைய வாங்மயமாய் இருக்கக்கூடிய திருவாய்மொழியிலே எம்பெருமான் இருக்கின்றானாம். ஶடகோபவபுஷி - நம்மாழ்வாருடைய திருமேனியெங்கும் எம்பெருமான் திருவுள்ளமுகந்து எழுந்தருளியிருக்கிறானாம்.  

       ரங்க க்ருஹே ஶயிதம் திருவரங்கத்திலே எம்பெருமான் உகந்து எழுந்தருளியிருக்கிறானாம். எம்பெருமான் எப்படி ஆலிலையிலும், தேவகியின் கர்பத்திலும், திருவரங்கத்திலும் உகந்து எழுந்தருளியுள்ளானோ அதுபோலே நம்மாழ்வாருடைய திருவாக்கான திருவாய்மொழியிலேயும்,  நம்மாழ்வாருடைய திருமேனியிலேயும் எழுந்தருளியுள்ளான்.

      

அடியார்கள் இதை படிப்பதோடு நிறுத்திவிடாமல், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதுபோன்ற விஷயங்களைப் பகிர்ந்து, அனைத்து அடியார்களும் இந்த சிறுகைங்கர்யத்தில் பங்குகொள்ள வழிவகுப்போமாக.

இது முற்றிலும் இணையவழியில் வெளியாகும் மாதாந்திர இதழாகும். பத்திரிகை துவங்கிய தினத்தன்று ஆச்சார்ய புருஷர்களிடம் முதல்மாத பத்திரிக்கை கையேடுகளை சமர்ப்பித்து மங்களாசாசனம் பெற்றோம்.

 

மேலும் இப்பத்திரிக்கையை அடியார்கள் பெருவதற்க்கு எங்கள் 'Contact' பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலமாக தொடர்புக் கொண்டு சந்தா செலுத்தி இணையவழியில் பெற்றுக்கொள்ளலாம்.​ 

g6aSNwaD7S2-I1NYhVUulEK9kHapVgOObgtLDuorWAA=_plaintext_638255954667341495.jpg

திருவெள்ளறை மேலத்திருமாளிகை அம்மாள். ஸ்ரீ. உ. வே. ஸௌம்யநாராயணாசார்ய ஸ்வாமியிடம் சமர்ப்பித்தல்.

IMG-20230722-WA0080.jpg

ஶ்ரீவைஷ்ணவ மஹாநிதி - ஸ்ரீ. உ. வே. ரகுராமன் (எ) புத்தூர் பாலாஜி ஸ்வாமியிடம் சமர்ப்பித்த பொழுது.

IMG-20230722-WA0082.jpg

ஸ்ரீ. உ. வே. ஸாரதி தோதாத்ரி ஸ்வாமியிடம் சமர்ப்பித்த பொழுது.

IMG-20230722-WA0081.jpg

ஸ்ரீ. உ. வே. ஸௌம்ய கேஶவன் (எ) வகுளாபரணன் ஸ்வாமியிடம் சமர்ப்பித்த பொழுது.

IMG-20230722-WA0083.jpg

ஸ்ரீ. உ. வே. திருமலை அனந்தாண்பிள்ளை பத்ரி நாராயணன் ஸ்வாமியிடம் சமர்ப்பித்த பொழுது.

WhatsApp Image 2023-07-22 at 13.03.32.jpg

ஸ்ரீ. உ. வே. திருக்கோவலூர் ஸுதர்ஶன் ஸ்வாமியிடம் தபால் மூலம் சமர்ப்பித்த பொழுது.

WhatsApp Image 2023-07-23 at 14.37.49.jpg

ஸ்ரீ. உ. வே. கொங்கிலாச்சான் பாலாஜி ஸ்வாமியிடம் சமர்ப்பித்த பொழுது.

IMG-20230722-WA0079.jpg

ஸ்ரீமதி. பட்டு திருவேங்கடம் மாமி அவர்களிடம் சமர்ப்பித்த பொழுது.

WhatsApp Image 2023-07-22 at 19.51.12.jpg

குமாரி. ஹரிணி ஸ்ரீதர் அவர்களிடம் பத்திரிக்கை கையேடு வழங்கிய பொழுது.

குமாரி. ஜனனி கிரிதரன் பத்திரிக்கையை தபால் மூலம் பெற்றுக்கொண்டார்.

bottom of page