

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருக்கோயில் ஸம்ரக்ஷணம் || Thirukoyil Samrakshanam
சேவடிசெவ்வித்திருக்காப்பு திருக்கோயில் ஸம்ரக்ஷணத்தின் தொடக்கம் சோபக்ருத் - ஆனி மாதம் 7ஆம் தேதி (22-06-2023) அன்று நடைபெற்றது. இவ்வைபவத்தை ஶ்ரீவைஷ்ணவ மஹாநிதி - ஸ்ரீ. உ. வே. R. ரகுராமன் (எ) புத்தூர் பாலாஜி ஸ்வாமி, எழுந்தருளியிருந்து கடாக்ஷித்தார்.
இந்த கைங்கர்யம் தொடங்கப்பெற்ற சன்னிதியின் விவரம் :
சௌந்தரவல்லி நாயிகா ஸமேத சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில்,
சன்னிதித் தெரு, சுந்தர பெருமாள் கோயில்.
இந்த சன்னிதிக்குச் சென்று எம்பெருமானை சேவிப்பதற்கு :
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் சுந்தர பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியும் செல்லலாம், அல்லது சுந்தர பெருமாள் கோயில் இரயில் நிலையத்தில் இருந்து மிக அருகாமையில் உள்ளதால் அங்கிருந்தும் செல்லலாம்.
சௌந்தரவல்லி நாயிகா ஸமேத சௌந்தரராஜ பெருமாள்
ஸ்தல புராணம் :
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தலைவனான இந்திரன் சாபம் ஏற்பட்டு தமது பதவியை இழந்தார். அத்தோடு அவர் வெண்குஷ்ட நோயாலும் பாதிக்கப்படுகிறார். இந்த சாபத்திற்கான ப்ராயஶ்சித்தம் ஒவ்வொரு நாளும் ஒரு வெண்பூசணியை ஒரு ஏழை அந்தணருக்கு தானம் வழங்கவேண்டும் என்பது. இந்த ஊரின் பெயர் சுந்தரசோழவிண்ணகரம், இங்கே தங்கி ஒவ்வொரு நாளும் ஒரு ஏழை அந்தணரைத் தேடி தானம் வழங்கத் தொடங்கினார். இந்த ப்ராயஶ்சித்தம் ஒரு வருட காலத்திற்குச் செய்ய வேண்டும். ஆனால் ஒருநாள் எவரும் தானம் பெற வராததால் தேவேந்திரன் ஸ்ரீமந் நாராயணனை பிரார்த்திக்க, பரமபதத்தில் இருந்து ஓர் க்ருஹஸ்தன் திருக்கோலத்தில் இங்கே எழுந்தருளி தானம் பெற்றுக்கொள்கிறார். இந்தரன் நோயும் நீங்கி, சாபத்தில் இருந்தும் முக்தி பெற்று தமது பதவியை மீண்டும் அடைகிறார். தேவேந்தரனின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கேயே நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
இப்போது இந்த சன்னிதியை, நல்ல நிலையில் பேணிப் பாதுகாத்து வருகிறார் ஸ்ரீமான். ஆராவமுதன் பாகவதர். அவர் கைங்கர்யத்திற்கு பல்லாண்டு பாடுகிறோம். இவர் இந்த சன்னிதி மட்டுமின்றி, சுற்றுப்புறத்தில் உள்ள சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்கள் வரை பார்த்துக்கொண்டு வருகிறார். அந்தக் கோயில்கள் மிகவும் மோசமான நிலையிலும், ஒருவேளை தளிகைக்குக் கூட வசதியில்லாமலும் உள்ளன. இவ்வாறு சிதிலம் அடைந்த அனைத்து சன்னிதிகளுக்கும் அர்ச்சகர்கள் கிடைக்கப்பெற வேண்டும்.
அவரிடம் தேவைகளைக் கேட்டு அறிந்து தற்போது கிடைத்த உபகாரத்தைக் கொண்டு பின்வருமாறு குறிப்பிட்டுள்ள பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
-
மஞ்சள் தூள்
-
சந்தனம்
-
காவி வஸ்திரம்
-
நெய்
-
நல்லெண்ணெய்
-
நூல்திரி
-
உலர் த்ராட்சை
-
ஊதுபத்தி, கற்பூரம்.





